கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு
கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு சிற்றுணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிற்றுணவக உரிமையாளர்களே இவ்வாறு உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முட்டை ரொட்டி, பராட்டா, மரக்கறி ரொட்டி மற்றும் ரோல்ஸ் உள்ளிட்ட சிற்றுணவுகளின் விலைகள் 10 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரிகக்கப்பட்டுள்ளது.
கருப்புச் சந்தையால் ஏற்பட்ட நிலை
தற்போது சிற்றுணவகங்களில், அரை இறாத்தல் பாணும், பருப்பு கறியும் 250 ரூபா என்ற அளவிலும், கால் இறாத்தல் பாணும், பருப்பு கறியும் 180 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக நுகர்வோரை பாதுகாப்பதற்காக தாங்கள் விலைகளை தீர்மானித்த போதிலும், தற்போது சிற்றுணவக உரிமையாளர்களே விலைகளை அதிகரித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கருப்புச்சந்தை வர்த்தகர்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
600 ரூபாவாக்கு விற்பனை செய்யப்பட்ட கொத்து ரொட்டி, தற்போது 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட மரக்கறி ரொட்டி, இன்று 120 ரூபாவுக்கு விற்பனை செய்யபடுவதாகவும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.