யாழிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் எலி எச்சங்களுடன் உணவுபொருட்கள்
பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன்போது, வண்டு மொய்ந்த உணவுப்பொருட்களையும் காலாவதி கடந்த உணவுப்பொருட்களையும் எலி எச்சங்களுடன் கூடிய உணவுப்பொருட்களையும் பூஞ்சணம் மொய்த்த உணவுப்பொருட்களையும் விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றின் அறிவிப்பு
இதற்கமைய, வழக்கு விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று, உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

அதேவேளை, வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பவற்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் போது, சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்களுக்கு எதிராக வழக்ககு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைகளின் போது உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்த மன்று, உணவக உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும் , பல்பொருள் அங்காடிகளில் உரிமையாளர்களுக்கு 40 ஆயிரம் , 10 ஆயிரம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri