மார்ச் மாதம் அதிகரித்த உணவு பணவீக்கம்
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு அமைய மார்ச் மாதம் பணவீக்கம் ஆண்டின் அடிப்படையில் 18.7 வீதமாக காணப்பட்டது என சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உணவு பணவீக்கம் 30.2 வீதமாக உணவுகள் அல்லாத பணவீக்கம் 13.4 வதமாக பதிவாகியுள்ளதாகவும் சனத் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் இது 27.7 மற்றும் 10.1 ஆக பதிவாகி இருந்தது. பெப்ரவரி மாதம் நுகர்வோர் சுட்டெண் 160.1 வீதமாக பதிவாகியுள்ளதுடன் மார்ச் மாதம் 164.9 வீதமாக பதிவாகியுள்ளது.
கொழும்பு மாவட்டம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மக்கள் கொள்வனவு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்பு நுகர்வோர் சுட்டெண் உருவாக்கப்பட்டுள்ளது.