உணவு - போக்குவரத்துக்கு பெரும் தட்டுப்பாடு! கொழும்பில் இருந்து நேரடி ரிப்போட் (VIDEO)
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வெடித்துள்ள வன்முறை சம்பவங்கள் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றுமுழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கொழுப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கொழும்பிலிருந்து எமது ஊடகவியலாளர் வி.டில்சான் எம்மோடு பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 33 ஆவது நாளாக தொடர்கின்றது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி,பிரதமர், அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனையும் மீறி வன்முறை சம்பவங்கள் பதிவாகி வருகின்றமையினால் நாடளாவிய ரீதியில் முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்,கொழும்பினை பொருத்தவரையில்,உணவு பற்றாக்குறை என்பது பாரியளவில் அதிகரித்துள்ளதுடன்,விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 13 மணி நேரம் முன்

விஜய் டிவி ராமர் இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்....இது தெரியாம போச்சே? Manithan

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri
