புதுக்குடியிருப்பு-உலகளந்த விநாயகர் தேவஸ்தானத்தில் பொதுமக்கள் நலன்கருதி அன்னதானம் வழங்கல் ஆரம்பித்து வைப்பு
புதுக்குடியிருப்பு உலகளந்த விநாயகர் தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமை தோறும் இடம்பெறவிருக்கின்ற அன்னதான உபயத்தின் ஆரம்ப நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக நேற்றையதினம் (11) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எழுந்தருளியிருக்கும் புதுக்குடியிருப்பு உலகளந்த விநாயகர் தேவஸ்தானத்தில் பொதுமக்கள் நலன்கருதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட இருக்கும் நிலையில் நேற்றையதினம் அன்னதான உபயத்தின் ஆரம்ப நிகழ்வு விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் சம்பிரதாய பூர்வமாக நண்பகல் ஆலய அன்னதான மண்டபத்திலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அன்னதானம் வழங்கல்
அன்னதான நிகழ்வின் உபயகாரர்களான லண்டனில் வசிக்கும் கனகரத்தினம் சிவகுமார் மற்றும் நாகராசா ஜீவறஞ்சன் ஆகியோருக்கு பரிபாலன சபை சார்பாக நன்றி தெரிவித்திருந்தார்கள்.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.சத்தியரூபன், புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் கி.டென்சியா, புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பொறுப்பதிகாரி ப.பரணீதரன், ஆலய பரிபாலன சபைத் தலைவர் செல்வநாயகம் ஆலய பரிபாலன சபையினுடைய போசகர் பொ.பேரின்பநாயகம் மற்றும் ஆலய பிரதம குருக்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அடியவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





