பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் வர்த்தக அமைச்சுடன் உடன்படிக்கை: நலின் பெர்னாண்டோ
பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள், மொத்த சந்தைக்கு வாரந்தோறும் தங்கள் பங்குகளை விநியோகிப்பதற்கு அமைச்சுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
”துருக்கி மற்றும் டுபாயில் உள்ள கோதுமை மா ஏற்றுமதியாளர்களுடன் நாட்டிற்கு தேவையான அளவு கோதுமை மாவை கொள்வனவு செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கோதுமை மா தட்டுப்பாடு
கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் கோதுமை மாவின் சில்லறை விலை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 350 மற்றும் 400 ரூபாவாக உயர்ந்துள்ளது.
ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக, இந்தியா தற்போது பல உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்துள்ளது” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரிமா மற்றும் செரண்டிப்
“இரண்டு பெரிய நிறுவனங்கள் கோதுமை மாவின் உள்ளூர் உற்பத்தி செயல்முறையில் ஈடுபட்டுள்ளன. பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள், மொத்த சந்தைக்கு வாரந்தோறும் தங்கள் பங்குகளை விநியோகிப்பதற்கு அமைச்சுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாகவும்” அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், “மாதாந்தம் 70 மெட்ரிக் தொன் கோதுமை மாவை இறக்குமதி செய்து வந்த உள்ளூர் கோதுமை மா இறக்குமதியாளர் ஒருவர், சந்தைக்கு கையிருப்பை வெளியிடாமல் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும்”அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“வெதுப்பக பொருட்களின் விலை உயர்வின் தற்போதைய நிலையை நுகர்வோர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மாற்று வழிகள்
இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெதுப்பக உரிமையாளர்களும் தங்கள் பொருட்களை தயாரிக்க அரிசி மா போன்ற மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“இதேவேளை 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் நேற்று தீர்மானித்துள்ளது.
50 கிலோ கோதுமை மாவின் மூடை ஒன்று மொத்த சந்தையில் 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் நாடு முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட
வெதுப்பகங்கள் கோதுமை மாவின் பற்றாக்குறைக்கு மத்தியில் மூடப்பட்டுள்ளன என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.”