கோதுமை விலை அதிகரிப்பால் உணவகங்கள் மூடப்படும் அபாயம்
கோதுமை மாவின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்படும் பட்சத்தில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மைக்காலமாக கோதுமை மாவின் விலை கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தற்போதைக்கு ஒரு கிலோ கோதுமை மா 400 ரூபாவுக்கும் மேலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகள் அனைத்தும் விலை அதிகரிக்கப்பட்டது.
எனினும் ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவகங்களின் உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்படவில்லை.
ஹோட்டல்கள் மூடப்படலாம்
இந்நிலையில் தொடர்ச்சியாக கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில் ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவகங்களை மூடவேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எனவே அரசாங்கம் இதுவிடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்