பத்தாவது நாளாக தொடரும், பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம்
வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டமானது இன்றைய தினம் பத்தாவது நாளாக நல்லூரில் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அரசியல் கைதிகளுக்காக தொடர்ச்சியாக போராடும் கிறிஸ்தவ பாதிரியார் சக்திவேல் மற்றும் அவரோடு இணைந்து சிங்கள பாதிரிமார் மற்றும் சிங்கள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் மாணவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் இணைந்து தமது பகிரங்க ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
இதன்போது இதில் பங்கேற்ற சிங்கள சிவில் சமூக பிரதிநிதிகளும் தமது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு உள்ளக பொறிமுறையில் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை ஆகிய காரணத்தினால் சர்வதேச நீதி கோரி நிற்கின்றார்கள்.
இது நியாயமான கோரிக்கை, இதற்கு வலு சேர்க்கவேண்டியது தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கடமையும் பொறுப்பும் ஆகும்.
எனவே இந்த போராட்டத்தை பலமிக்க போராட்டமாக மாற்றி சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த அழுத்தம் கொடுக்க தொடர்ச்சியாகப் போராட அனைவரும் முன்வர வேண்டும் என சக்திவேல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.





