கோவிட் நோயாளிகளுக்கு வழங்கிய உணவில் புழுக்கள்
கோவிட் சிகிச்சை நிலையமாக செயற்பட்டு வரும் மாத்தளை - நாவுல, அம்பன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் காணப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உணவு விநியோகத்திற்கான வழங்கப்பட்ட ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை கோவிட் தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நோயாளிகளுக்கு தேவையான உணவகளை சுகாதார பாதுகாப்புடன் தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அம்பன வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளுக்கு தேவையான உணவை சமைத்து வழங்கி வருகின்றனர்.





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
