பீல்ட் மார்ஷல் பதவியின் பெறுமதியை பொன்சேகா கற்றுக்கொள்ள வேண்டும்:சரத் வீரசேகர (Video)
பீல்ட் மார்ஷல் பதவியின் பெறுமதியை பற்றி கற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara), ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு (Sarath Fonseka)கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் ஆரம்பிக்கும் முன்னர் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே வீரசேகர இதனை கூறியுள்ளார்.
இராணுவத்தில் வழங்கப்படும் மிக உயர் பதவி பீல்ட் மார்ஷல் பதவி. இந்த பதவி வகிக்கும் நபரை பராமரிக்க பொதுமக்களின் பணம் செலவிடப்படுகிறது.
பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர போரில் இந்தியாவின் சார்பில் தலைமை தாங்கிய இராணுவ தலைவரான மனிஷ் ஷோவுக்கு பேர் முடிந்த பின்னர் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது.
அவரது முன்னுதாரணமாக வழக்கை தொடர்பில் இந்தியாவில் மாத்திரமல்ல உலகமும் முழுவதும் நினைவிடங்கள் உள்ளன. இந்த பதவி தொடர்பில் சீனாவை சரத் பொன்சேகா முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்படியான பெறுமதிமிக்க பதவியை வகிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் 2022 ஆம் ஆண்டும் மக்கள் பிரதிநிதியாக தனக்கு கிடைக்கும் நேரத்தை மற்ற நபர்களுக்கு சேறுபூச பயன்படுத்தாது, அர்த்தமுள்ளதாக பயன்படுத்த வேண்டும்.
இராணுவத்தினரின் அருந்தும் தேனீர் பற்றி பேசும் சரத் பொன்சேகா, வெள்ளை கொடி சம்பவத்தின் மூலம் இராணுவத்தை காட்டிக்கொடுத்தார் எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.