இலங்கை சார்பாக எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்: சரத் பொன்சேகா
இலங்கையின் சார்பாக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கு எதிராக அவரது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தயாராகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
"இலங்கையில் இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், ஊழலை அம்பலப்படுத்துவதற்கும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் அரசியல் விருப்பம் உள்ள ஒரு தலைவரை இலங்கை தெரிவு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது.
இதுவரை எந்தத் தலைவரும் அப்படிச் செய்யவில்லை.
எனினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவ்வாறானதொரு தலைவரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு அமையும் என நான் நம்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.
சுயேட்சை வேட்பாளர்
இதற்கிடையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் தரப்புக்கள் கூறுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான அவர், இது தொடர்பில் முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று பொன்சேகாவுக்கு நெருக்கமான தரப்புக்களை கோடிட்டு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் பொன்சேகா எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டு சேராமல் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
