இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க்க திட்டமிட்டு செயற்படுகின்றனர்: கஜேந்திரன் எம். பி
அரசாங்க அதிபரும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க்க திட்டமிட்டு செயற்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்(Selvarajah Kajendran) தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறையை கண்டித்து நேற்று (24.06.2024) இடம்பெற்ற வீதிமறியல் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்தின் பங்கு கொண்டுள்ளார்.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் உரிமை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கல்முனை வடக்கு பிரதேச செயலகங்களின் அதிகாரங்களை பறித்து அதனுடைய செயற்பாடுகளை முடக்கி கல்முனையில் உள்ள தமிழர்களின் உரிமையை முற்றாக பறித்தெடுக்கும் நோக்கத்தோடும் இந்த நிலங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்யும் நோக்கத்தோடும் பல நீண்டகாலமாக திட்டமிட்ட செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.
இந்த பறிக்கப்பட்ட பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் மீளவும் வழங்கப்பட வேண்டும் எனவும் ஒரு தனியான கணக்காளர் நியமிக்கப்படவேண்டும் என தொடர்சியாக கல்முனை வடக்கு மக்கள் கோரிவந்துள்ளனர்.
இந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட நிலையிலே கடந்த 92 நாட்களாக இந்த கோரிக்கைகளுக்காக தொடர்ச்சியாக போரடிவருகின்றனர்.
எனினும், 90 நாட்கள் கடந்தும் இனங்களுக்கிடையே ஒரு நல்லுறவை பேண வேண்டிய ஒரு அதிகாரியான இந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் இந்த இடத்துக்கு இன்றுவரையும் வந்து கேட்கவில்லை.
அதிகார துஷ்பிரயோகம்
ஆனால் இந்த போராட்டம் ஆரம்பித்த பின்னர் அரசாங்க அதிபர் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துக்கு பல தடை வந்திருக்கின்றார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல தடவைகள் நான் பேசியுள்ளேன்.
இதேவேளை, கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் வேண்டும் என்று இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் விதமாக எதேச்சையாக சட்டத்துக்கு முரனாக இந்த அலுவலகங்களின் விவகாத்தில் தலையிட்டு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
இருந்தபோதும், இன்று 5 ஆயிரத்துக்கு மேல் மக்கள் ஒன்று திரண்டு இந்த கோரிக்கைகளுக்காக கிட்டத்தட்ட 6 மணித்தியாலயங்கள் இந்த பிரதான வீதிகள் மறிக்கப்பட்டு மிகவும் ஒரு பதற்றமான சூழல் உருவாகி இருந்தபோதும்கூட இனங்களுக்கிடையே முறுகல் வந்துவிடக்கூடாது என எந்த கவலையும் இல்லாமல் அரசாங்க அதிபர் வரவில்லை மக்கள் மிகவும் கொதித்து போயுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 15 மணி நேரம் முன்

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
