அநுர அரசுக்கு பொன்சேகா பாராட்டு - ஆதரவு வழங்கவும் முடிவு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசில் உள்ள அமைச்சர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதனைப் பாராட்ட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு இருக்கவில்லை. பணம் இருக்கும் இடத்தில்தான் நீதி இருந்தது.
நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள்
ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. குறுக்கு வழியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை.
இதற்குரிய பாராட்டை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதேபோல் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும்.
அதனை நோக்கிய பயணத்தின்போது எமது ஆதரவு வழங்கப்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri