15 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவது குறித்து கவனம்
நாட்டில் 15 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்க மருந்ததக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் பிரசன்ன குணசேனர தெரிவித்துள்ளார்.
உலகில் பயன்படுத்தப்படும் முதனிலை தடுப்பூசியொன்று எதிர்வரும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் இலங்கைக்கு கிடைக்கப் பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தடுப்பூசி கிடைக்கப் பெற்றதன் பின்னர் சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் பின்னர் கண்டி, குருணாகல், ரத்தினபுரி மாவட்டங்களில் கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி கிடைப்பதன் அடிப்படையில் ஏனைய மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 25 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
