கண்டாவளை பகுதியில் மக்கள் குடியிருப்புக்களிற்குள் புகுந்த வெள்ளநீர்!
கிளிநொச்சி-கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் மக்களின் குடியிருப்புக்களிற்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
இதனால் குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாகேந்திரபுரம் பகுதியில் 24 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளைச் சுற்றி வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் மற்றும் கிராம அலுவலர்கள் ஆகியோர் மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களிற்கான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வைத்துள்ளனர்.
தொடர்ச்சியான மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் பகுதியில் தற்காலிக வீடொன்றும் சேதமடைந்துள்ளது.
அத்துடன் குறித்த குடும்பத்திற்கான நிரந்தர வீடு அமைப்பதற்கான நடவடிக்கையினை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளவும் பிரதேச செயலாளர் உறுதி வழங்கியுள்ளார்.