கிளிநொச்சியில் பலத்த மழைவீழ்ச்சியால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ளம்
கிளிநொச்சியில் பெய்து வரும் பலத்த மழையினால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், சில குளங்கள் வான் பாய்ந்து வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கனகாம்பிகைகுளம் 7 அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன் பிரமந்தனாறு குளம் 3 அங்குலம் வான் பாய்கின்றது.
பிரமந்தனாறு குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதால் பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கனகாம்பிகை குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, கனகாம்பிகைக்குளம், பன்னங்கண்டி, பரந்தன் பகுதிகளிலும் உள்ள மக்களையும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.





நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening
குற்றவாளிகளோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள்! ஆதாரங்களை அழிக்க அரங்கேற்றிய துப்பாக்கிச்சூடுகள்
எதிர்வரும் அக்டோபருக்கு பின் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை