கொழும்பு பிரதேச செயலாளரின் அறிவிப்பு
அம்பத்தலே அணைக்கட்டில் வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்தும் மட்டத்தை தாண்டி நீர்பாய்வதால் கடுவலை-மாலேபே வீதி-மாலபே-பத்தரமுல்லை-அத்துருகிரிய-மாலபே வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக கொழும்பு மாட்டத்தின் செயலாளர் பிரசன்ன கினிகே அறிவித்துள்ளார்.

வீதிகள் நீரில் மூழ்கல்
இந்த வீதிகளை அண்டி வாழும் மக்களை வெளியேறுமாறு நேற்று (29.11.2025)அறிவிக்கப்பட்டுள்ளது.களனி கங்கையின் நீரின் மட்டம் எதிர்பார்த்த அளவை விட அதிகரித்துள்ளது.
இதில் கொலன்னாவ-கொழும்பு-கடுவெல பிரதேசத்தை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது வரை 378 கிராம சேவகர் பிரிவுகளில் 40,740 குடும்பங்களைச் சேர்ந்த 1,78,805 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.