பிரித்தானியாவில் நிலைகொண்டுள்ள ஹென்க் புயல்: பெருவெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள்
பிரித்தானியாவில் ஹென்க் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு இன்றும் தொடர வாய்ப்பிருப்பதாகவே அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,000 வீடுகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பாதைகளில், வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
⚠️ Warmer, wetter winters mean more floods ⚠️
— WWT (@WWTworldwide) January 5, 2024
Wetlands act as natural sponges and store rainwater, releasing it slowly rather than flooding.
But 75% of the UK’s wetlands have been lost in the last 300 years.
Nature depletion has very real consequences for our communities. pic.twitter.com/AZnnnYR5w4
வெப்பநிலை குறையும் வாய்ப்பு
இதன்படி இங்கிலாந்து முழுவதும் தொடருந்து போக்குவரத்து தாமதமாகலாம் அல்லது ,இரத்து செய்யப்படலாம் என அந்நாட்டின் தொடருந்து நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இதன்படி வெள்ளம் காரணமாக பிரிதானியாவின் குளோசெஸ்டர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே வெப்பநிலை தென்மேற்கு இங்கிலாந்தின் கிராமப்புற பகுதிகளில் -4C வரை குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை இரவு Shropshire மற்றும் north Herefordshire-ல் உள்ள வெல்ஷ் எல்லையில் உள்ள கிராமப்புறங்களில் வெப்பநிலை -6C வரை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |