முத்தையன் கட்டு குளத்தின் வான் கதவுகள் மீள மூடப்பட்டன
நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் திறக்கப்பட்ட முல்லைத்தீவு (Mullaitivu) - முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் மீள மூடப்பட்டுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு குளங்களின் நீர்மட்டம் அதிகரித்திருந்தன.
இந்தநிலையில், கடந்த 25ஆம் திகதி முத்தையன் கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் 6 அடி வரை திறந்துவிடப்பட்டன.
வான்கதவுகள் மூடல்
இவ்வாறு திறந்துவிடப்பட்ட நீரானது பேராறு ஊடாக நந்திக்கடலை சென்றடைந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடலை சென்றடைகின்றது.

எவ்வாறாயினும், கடந்த 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வட்டுவாகல் பாலத்தினை மூடி வெள்ளம் பாய்ந்த காரணத்தினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து, முத்தையன் கட்டு குளத்தின் வான் கதவுகள் மீள மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கர் கணக்கான விவசாயசெய்கைகள் மழைவெள்ளத்தினால் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam