வெள்ளத்தில் மூழ்கிய கண்டி தொடருந்து நிலையம் (VIDEO)
கனமழை காரணமாக கண்டி தொடருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தொடருந்து பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பிலிமத்தலாவை மற்றும் பேராதனை தொடருந்து நிலையங்கள் இடையில் அமைந்துள்ள நானுஓயா தொடருந்து கடவைக்கு அருகில் மண் மேடு சரிந்துள்ளதன் காரணமாக மலையக தொடர்ந்து சேவைக்கு தடையேற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து கண்டி வரை செல்லும் தொடருந்து பிலித்தலாவை வரை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கண்டி மற்றும் மய்யாவ தொடருந்து நிலையத்திற்கு இடையில் தொடருந்து பாதையிலும் மண் மேடு சரிந்துள்ளது.
அதேவேளை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை தொடருந்து நிலையத்தில் இருந்து முற்பகல் 10.15 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் நோக்கி புறப்படவிருந்த தொடருந்து மற்றும் கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 12.40 நானு ஓயா நோக்கி புறப்படவிருந்த தொடருந்து என்பன இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்தள்ளது.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
