பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இலங்கையில் பெய்து வரும் கன மழை காரணமாக களு, களனி, ஜின் ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக அத்தனகலு ஓயாவை அண்டிய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
மழை மற்றும் இடியுடன் கூடிய மழை
பல தாழ்வான பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்றும் நீர்ப்பாசன திணைக்களம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல மாகாணங்களில் அவ்வப்போது மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் காங்கேசன்துறை முதல் திருகோணமலை மற்றும் காலி முதல் அம்பாந்தோட்டை வரையிலான ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |