வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பிரதான ஆறுகளின் நீர் மட்டம் மிக அதிகமாக இருப்பதால், மழை பெய்தால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாட்டின் 6 மாகாணங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு அருகில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெள்ள அபாயம்
அதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்களில் இந்த ஆபத்து உள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மேற்கூறிய மாகாணங்களில் வெள்ள அபாயம் உள்ளமையினால் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam