மழை பெய்தால் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் - கரையோர பகுதி மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

Colombo Kandy Nuwara Eliya Weather
By Dhayani Aug 04, 2026 03:41 AM GMT
Report

நாட்டில் தற்போது நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இன்று (04) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண பாடசாலைகள் மீண்டும் திறப்பு! வெளியான அறிவிப்பு

மத்திய மாகாண பாடசாலைகள் மீண்டும் திறப்பு! வெளியான அறிவிப்பு

 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை 

கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் மழை பெய்தபோதிலும், பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   

மழை பெய்தால் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் - கரையோர பகுதி மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் | Flood Situation Irrigation Department Announcement 

இதன்படி, மகாவலி கங்கையின் நாவலப்பிட்டி மற்றும் பேராதனைப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், களனி கங்கையின் மேல் பகுதிகளான கித்துல்கல மற்றும் நோர்வூட் ஆகியவற்றின் நீர்மட்டமும் குறைந்து வருவதுடன், கித்துல்கல பகுதியில் சிறியளவு அதிகரிப்பு பதிவாகியிருந்தாலும் அது ஆபத்தான நிலைமை அல்ல என தெரிவித்துள்ளார்.

அவிசாவளை, லென்கொஸ் மற்றும் ஹங்வெல்ல உள்ளிட்ட தாழ்நிலைப் பகுதிகளின் நீர்மட்டமும் குறைந்து வருவதால், களனி கங்கையைச் சுற்றியுள்ள வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என அவர் கூறினார்.

மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் 

களு கங்கையைச் சுற்றியுள்ள இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளில் நீர்மட்டமும் படிப்படியாகக் குறைந்து வருவதால், அந்த ஆற்றுப் படுகையிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை என சூரியபண்டார தெரிவித்தார்.

மழை பெய்தால் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் - கரையோர பகுதி மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் | Flood Situation Irrigation Department Announcement 

நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு கிடைக்கவில்லை என்பதுடன், இன்றைய தினமும் 25 மில்லிமீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவே எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக அந்த ஆறுகளின் நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்தாலும் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் கூறினார்.

அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயாவின் நீர்மட்டங்களும் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதுடன், அந்த நீர்மட்டங்கள் அபாயக் கட்டத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாட்களில் ஈர வலயத்தின் மேல் சரிவுப் பகுதிகளில் மழை பெய்தால், ஏற்கனவே உயர் நீர்மட்டத்தில் இருக்கும் களனி கங்கை, களு கங்கை மற்றும் மகாவலி கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கோரியுள்ளார்.

தென்னிலங்கை அரசியலில் குழப்பநிலை! சொகுசு ஹோட்டலில் இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்

தென்னிலங்கை அரசியலில் குழப்பநிலை! சொகுசு ஹோட்டலில் இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்

 

மோசமடையும் காலநிலை - பல பகுதிகளில் திடீர் மின்தடை

மோசமடையும் காலநிலை - பல பகுதிகளில் திடீர் மின்தடை

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US