பாலமீன்மடு பிரதேசத்தில் நிவாரணம் வழங்குவதில் முறைகேடு! திடீரென கைவிடப்பட்ட போராட்டம்
மட்டக்களப்பு - பாலமீன்மடு பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக இன்று சனிக்கிழமை (13) போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த நிலையில், தையிட்டு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் தலையீடு செய்து எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாக உறுதி மொழி வழங்கியதையடுத்து போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
பாதிக்கபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம்
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள பாலமீன்மடு கிராம சேவகர் பிரிவில் 410 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் இந்த பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்தது டன் பலத்த சேதமடைந்துள்ளதுடன், உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் பதில் கடமையாற்றி வந்த கிராம உத்தியோகத்தர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு இருந்த போதும் அந்த பகுதி மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் சிபாரிசில் 26 பேருக்கு மட்டும் வீடு பாதிப்புக்கு 25 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து நீதிகோரி இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கிராம அபிவிருத்தி சங்க கட்டட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
கைவிடப்பட்ட போராட்டம்
இதையடுத்து கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சகிதம் சென்று அங்கு கூடியிருந்த மக்களிடம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது முற்று முழுதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முகத்துவாரம் கடல் மற்றும் களப்பு பகுதியை அண்டியதுடன் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்த போதும் மாநகரசபை உறுப்பினர் தனக்கும் அவர் சார்ந்த 26 பேர் மட்டுமே 25 ஆயிரம் ரூபா நிவாரணத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில் தையிட்டு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் தலையீடு செய்து எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
எனவே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாக உறுதி மொழியை அடுத்து மக்கள் வெள்ளிக்கிழமை நிவாரணம் வழங்காவிட்டால் நாங்கள் பிரதேச செயலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
Bigg Boss: பாரு, கம்ருதினால் கிடைத்த தண்டனை... விஜய் சேதுபதியிடம் குற்றவாளியாக நிற்கப்போவது யார்? Manithan