இடர் நிவாரண சேவை அதிகாரி வெள்ளத்தில் சிக்கி பலி
இரத்தினபுரி பிரதேசத்தில் வெள்ளம் தொடர்பான நிலைமையை பார்வையிட சென்றிருந்த கிரியெல்ல பிரதேச இடர் நிவாரண சேவை அதிகாரி, வேகமான வெள்ள நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புன்சிறி கருணாரத்ன என்ற 41 வயதான அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் இடர் நிவாரண சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் வெள்ள நீரோட்டத்தில் சிக்கியுள்ளதுடன் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையில் பெய்து வரும் கன மழையால், நாட்டில் தாழ்நில பிரதேசங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



