ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கு சுமார் 03 பில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் 12 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
அபிவிருத்தி நடவடிக்கை
அந்த ஏற்பாடுகளுடன் கிராமப்புற வீதிகள் மற்றும் பாலங்கள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் சுமார் 65 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதனை தெரிவித்தார்.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
