வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் ஆப்பிரிக்கா : தொடரும் உயிரிழப்புக்கள்
தென் ஆப்பிரிக்காவில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 21 போ் உயிரிழந்துள்ளனர்.
க்வாஸுலு - நடால் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக லேடிஸ்மித் கிராமமே வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில்,
மீட்பு பணிகள்
நத்தார் தினம் முதல் ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கில் 1400 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், இதுவரை 21 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் தொடர்ந்தும் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குறித்த மாகாணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 440 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
