பொகவந்தலாவையில் நீரில் மூழ்கிய பல தாழ்வான பகுதிகள்
பொகவந்தலாவையில் நேற்று பெய்த கனமழையால், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமு ஓயா, பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ பகுதியில் உள்ள பல தாழ்வான பகுதிகளை நீரினால் மூழ்கியுள்ளன.
பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், பொவந்தலாவ பகுதியில் உள்ள பல தோட்டங்களுக்குச் செல்லும் பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.
பலத்த காற்று
இதற்கிடையில், மவுஸ்ஸாகலை பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நேற்று (18) மாலை 5 மணியளவில் நல்லதண்ணி மரே தோட்டத்திலிருந்து நல்லதண்ணி நகரை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியின் மீது மரம் ஒன்று விழுந்ததில், முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் அதிஷ்டவசமாக முச்சக்கரவண்டி சாரதி உயிர்தப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |