குளத்தில் மிதக்கும் மரைகள்: தீவிரமடையும் விசாரணைகள்(Photos)
அம்பேவெல வாவியில் கடந்த இரு வாரங்களுக்குள் 20 இற்கும் மேற்பட்ட மரைகள் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதன் பின்புலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவும் தனது செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிகரிக்கும் மான்,மரை வேட்டை
ஹோட்டன் தென்ன தேசிய சரணாலய பகுதியில் மான், மரை உள்ளிட்ட வன விலங்குகள் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடப்படுகின்றன. இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட வேட்டை நாய்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
தனிநபர்கள் மற்றும் சில குழுவினர் இணைந்து வன விலங்குகளை வேட்டையாடி, அப்பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் விடுதிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், அப்பகுதிகளுக்கு வருபவர்கள் மான், மரை உள்ளிட்டவற்றை உண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.
தீவிர விசாரணை
கூட்டமாக வரும் மான்களை, வேட்டை நாய்கள் துரத்திச்சென்று கொல்கின்றன. நாய்களுக்கு அஞ்சி ஓடும்போது சில மான்கள் வாவிக்குள் விழுகின்றன. அதன்பின்னர் அவற்றை வேட்டைக்காரர்கள் கைப்பற்றுகின்றனர். இப்படியான முறையிலேயே வேட்டை இடம்பெற்று வந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், கடந்த சில நாட்களாக வேட்டையர்கள் எவரும் வருவதில்லை எனவும், நாய்கள் அநாதரவாக விடப்பட்டுள்ளன எனவும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நாய்கள் வேட்டையாடுவதை நிறுத்தவில்லை. அவை தொடர்ந்து மரைகளை துரத்திச் செல்கின்றன.
இதனால் வாவிக்குள் விழுந்து உயிரிழந்த மான்களே சடலமாக மிதப்பதாக அப்பகுதியில்
மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 19 நிமிடங்கள் முன்

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
