சர்வதேசத்தில் ஏற்பட்ட பதற்றம்.. 200இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து
வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து கரீபியன் விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தாமதமாகியுள்ளன.
விமான கண்காணிப்பு தளமான FlightAware இன் படி, JetBlue மிகவும் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விமான நிறுவனம் 209 விமானங்களை ரத்து செய்துள்ளதுடன் மேலும் 263 (26 வீதம்) விமானங்களை தாமதப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கை
அதேநேரம், டொமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்காவுக்கான விமானங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மீண்டும் முன்பதிவு செய்யலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறக் கோரலாம் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர் லைன்ஸ் ஆகியவை சனிக்கிழமை தங்கள் விமானங்களில் 4 வீத விமானங்களை இரத்து செய்துள்ளன.
மேலும் சனிக்கிழமை அதிகாலை FAA விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் 3 வீத விமானங்களை இரத்து செய்துள்ளது என குறிப்பிப்பட்டுள்ளது.