பிரித்தானியாவில் திடீரென இரத்து செய்யப்பட்ட விமானங்கள் - விமான நிலையங்களில் குவிந்துள்ள மக்கள்
அடுத்த 10 நாட்களில் 200க்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்யப்போவதாக EasyJet கூறியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூன் 6ம் தினதி வரை நாள் ஒன்றுக்கு Gatwick விமான நிலையத்தில் இருந்து சுமார் 24 விமானங்கள் பாதிக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில், விமானங்களில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற சில ரத்துசெய்தல்கள் மற்றும் சிரமங்களை தாமதமாக அறிவித்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
எனினும், இந்த பரபரப்பான காலகட்டத்தில் நம்பகமான சேவைகளை வழங்க இது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். வாடிக்கையாளர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தகவல் தெரிவிக்கப்படும்.
அவர்களின் விமானத்தை மீண்டும் முன்பதிவு செய்ய அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பம் வழங்கப்படுகிறது. அத்துடன், விதிமுறைகளுக்கு இணங்க இழப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
People at @Gatwick_Airport just stood around waiting for a @vueling flight that never took off!!! We’ve been waiting for 22 hours! pic.twitter.com/bnMtJqWh5i
— The Entrepreneurs Growth Club (@CharlieDay_EGC) May 28, 2022
"அடுத்த வாரத்தில் நாங்கள் ஒரு நாளைக்கு சுமார் 1,700 விமானங்களை இயக்குவோம், இவற்றில் கால் பகுதி கேட்விக் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 200 விமானங்களை ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், கேட்விக், மான்செஸ்டர், ஸ்டான்ஸ்டெட் மற்றும் பிரிஸ்டல் உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What an absolute joke of an airline @vueling are, yesterday we were bumped off our flight and booked on another flight which was cancelled at 1am!19 hours later still no flight! Vueling haven’t apologised or done anything! Totally outrageous. We are with a five year old! pic.twitter.com/Cjo6cTw8tw
— The Entrepreneurs Growth Club (@CharlieDay_EGC) May 28, 2022