இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட விமானம் வெடிகுண்டு அச்சுறுத்தலால் அவசரமாக தரையிறக்கம்
இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகரிலிருந்து ஒஸ்திரியாவின் வியன்னா (Vienna) நோக்கிச் சென்ற ஒஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் (OS82) வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக பல்கேரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஏர்பலேன் ஏர்பஸ் A320 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், 51 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் ரோமேனியா எல்லையை நெருங்கியபோது வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
போலி அச்சுறுத்தல்
இதனையடுத்து விமானம் அவசரமாக பல்கேரியாவின் தலைநகரான சோபியாவுக்கு (Sofia) திசை திருப்பப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

பல்கேரிய விமானப்படை போர் விமானங்கள், குறித்த விமானத்தை பாதுகாப்புடன் வழிநடத்தின. பின்னர், சோபியா விமான நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில் இது போலி அச்சுறுத்தலாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.