வரிச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண நிலையான காலக்கெடு விதிக்கப்பட வேண்டும்: தொழில்சார் நிபுணர்களின் தொழிற்சங்கம்
ஈட்டிய வருமான வரி தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண, நிலையான ஒரு காலக்கெடு விதிக்கப்பட வேண்டும் என்று தொழில்சார் நிபுணர்களின் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி செயலாளருடன் நேற்று (17.03.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த விடயத்தினை தொழில்சார் நிபுணர்களின் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளதாக செய்தித்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கை மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை, தொழிற்சங்கங்களுடன் நேரடி கலந்துரையாடலுக்கு தயார் என ஜனாதிபதி அனுப்பிய கடிதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் முடிவுக்கு வந்துள்ளது.
தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு
இதன்படி அடுத்த வாரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை நடத்துவதற்கு முன்னர் ஜனாதிபதியின் செயலாளர் நேற்று (17.03.2023) தொழில்சார் நிபுணர்களின் தொழிற்சங்கங்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.
வரி விதிப்பு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் உறுதியான காலவரையறை தயாரிப்பதற்கு ஜனாதிபதியின் செயலாளர் இணங்கியதாக தொழில்சார் நிபுணர்களின் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
