யாழில் இருந்து 1989 கிலோகிராம் மஞ்சளை மன்னாருக்கு கடத்த முயற்சி
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 1989 கிலோகிராம் மஞ்சள் மூட்டைகளுடன் மன்னாரைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று காலை 7.55 மணியளவில் மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட இலுப்பைக்கடவை பொலிஸார் மூன்றாம்பிட்டி பகுதியில் வைத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூட்டைகள் மற்றும் வாகனம் என்பன இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட ஐவரும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மஞ்சள் மூட்டைகள் மற்றும் வாகனம் என்பன மன்னார் நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட உள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்கள் 5 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan