பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டோருக்கு நேர்ந்த விபரீதம்
பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக கடலில் செல்ல முற்பட்ட ஐவர் படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் பிரித்தானிய நேரப்படி இன்று (23.04.2024) காலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
பிரான்சில் இருந்து 110 பேர் அடங்கிய சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று சிறிய படகொன்றில் பிரித்தானியாவுக்கு சென்றதாக பிரான்ஸ் நாட்டின் கடற்படையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஐவர்
இந்த படகு விபத்துக்குள்ளானதிலேயே மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் ஒரு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என பிரித்தானிய உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்லெவெர்லி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம் இன்று சட்டமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri
