இலங்கையில் ஐந்து மில்லியன் மக்கள் ஒற்றைத் தலைவலியினால் பாதிப்பு
இலங்கையில் ஐந்து மில்லியன் வரையான மக்கள் ஒற்றைத் தலைவலியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரபல நரம்பியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஆசிய தலைவலி நிவாரண சங்கம்
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன அண்மையில் ஆசிய தலைவலி நிவாரண சங்கத்தின் ஐந்தாவது தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு 24 நாடுகளின் பிரதிநிதிகள் ஆதரவாக வாக்களித்திருந்தனர். அங்கு கருத்து வெளியிடும் போது அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தலைவலியைக் கண்டறியக் கூடிய இணைய செயலி
அத்துடன் இலங்கையில் தற்போதைக்கு ஒற்றைத் தலைவலியைக் கண்டறியக் கூடிய இணைய செயலி ஒன்றை வடிவமைப்பதிலும் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.
அதற்காக அவரும் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் கூட்டு முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
