நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள புதிய அதிகாரம்: முன்வைக்கப்பட்ட யோசனை
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட, இணையப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை அங்கீகரிக்கும் அதிகாரம், விரிவான திருத்தங்களின் கீழ் ஜனாதிபதிக்கு பதிலாக நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ளது.
திருத்தங்களின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களை ஆணைக்குழு கொண்டிருக்கும்.
அதன்படி, ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் ஐந்து பேரின் பெயர்களை ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைப்பார்.
நீதிமன்ற தகவல்
இதற்கமைய ஆணையத்தின் உறுப்பினராக ஒருவரின் பெயரை, நாடாளுமன்றம் அங்கீகரிக்க மறுத்தால், அரச தலைவர் புதிய நியமனத்தை வழங்குவார்.
ஆணைக்குழுவின் உறுப்பினரை நீக்கும் விடயத்தில் கூட, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு மட்டுமே ஜனாதிபதி அதைச் செய்ய முடியும்.
இந்த மாற்றங்கள், யோசனையின், அசல் வரைவில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும் இந்தநிலையில்,மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்பவர்களுக்கான தண்டனை அதிகம், வேறு எந்தவொருவரின் மத உணர்களை காயப்படுத்துவது, இரகசியத்தன்மையை பாதுகாப்பது, இலங்கைக்கு வெளியே குற்றங்களை செய்வோருக்கான ஏற்பாடுகள் போன்ற விடயத்திலேயே மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இதனை ஏற்று சமர்ப்பிக்கப்பட்ட யோசனை திருத்தங்களை ஆய்வு செய்த நீதியரசர், குறித்த சில சரத்துக்களை தவிர, யோசனையின் மற்ற விதிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இல்லை என்பதை அவதானித்துள்ளனர்.
ஆகவே, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் யோசனையை நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
