இலங்கையின் சுற்றுலாத்துறை ஊக்குவிப்புக்களுக்காக இலக்கு வைக்கப்பட்டுள்ள ஐந்து முக்கிய நாடுகள்
இந்தியா மற்றும் ரஸ்யா உட்பட ஐந்து முக்கிய நாடுகளை இலக்கு வைத்து இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புக்களை செயற்படுத்தவுள்ளது.
இது தொடா்பான பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு அமைச்சா் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) விடுத்துள்ளார்.
அதன்படி, பிரான்ஸ், பிரித்தானியா, ஜெர்மனி, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் ஒருக்கட்டமாக அந்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து குறுகிய மற்றும் நீண்ட கால விளம்பரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளம்பரங்களின் போது கோவிட் தடுப்பூசியை வெற்றிகரமாக மேற்கொண்ட நாடாக
இலங்கையை பிரபல்யப்படுத்த தீா்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri