மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகளில் சட்டவிரோத பொருளுடன் ஐவர் கைது
காத்தான்குடி, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகளில் உள்ள பகுதிகளில் ஜஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சாவுடன் 5 பேரை இன்று கைது செய்துள்ளதாக அந்தந்த பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் காத்தான்குடி 6 பிரிவு பாலமுனை பகுதியில் சம்பவதினமான இன்று பகல் 1430 மில்லிக்கிராம், 490 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் இருவரையும், 4250 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாவக்கேணி மற்றும் குமாரபுரம் பகுதியில் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும், 24 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவர் உட்பட இருவரை மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri