ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருட்களுடன் 5 பேர் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருட்களுடன் 5 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி ஆறாம் ஏ.எல்.எஸ்.மாவத்தை மற்றும் புதிய காத்தான்குடி மையவாடி வீதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யு.ஏ.துமிந்த நயனசிறியின் தலைமையில் பொலிஸ் அதிகாரிகளான எஸ்.ஐ.றஹீம், சார்ஜன் அமித்த, அஜித் மற்றும் ஏ.சி.நியாஸ்தீன் ஆகியோர் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு சோதனை நடடிவக்கையின் போது இந்த ஐந்து பேரும் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சா போதைப்பொருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மூன்று சந்தேகநபர்களிடமிருந்து 230 மில்லிகிராம், 160 மில்லிகிராம், 90 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் மற்றைய இரண்டு சந்தேகநபர்களிடமும் இருந்து 1090 மில்லிகிராம், 90 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலிலும், ஆலோசனையின் பேரிலும் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
