போதைப்பொருட்களுடன் ஐவர் கைது!
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருட்களுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடுவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தலாவல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பார்க் வீதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 கிராம் 250 மில்லிகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கஹவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18.75 மில்லிலீற்றர் மதுபானம், 135 லீற்றர் கோடா, செப்புக்கம்பிகள் உள்ளிட்டவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கண்டி கட்டுகஸ்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்ஒழுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 590 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பல்லேகம ஹல்ஒழுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30.750 மில்லிலீற்றர் மதுபானம், 2 செப்புக்கம்பிகள், எரிவாயு அடுப்பு 01, எரிவாயு சிலிண்டர் 01, இரும்பு பீப்பாய் 01 என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா?- முழு சொத்து மதிப்பு இதோ Cineulagam
