இலங்கையின் பொருளாதர நிலைமை தொடர்பில் ஃபிட்ச் வெளியிட்டுள்ள மதிப்பீடுகள்!
இலங்கையின் சி.சி.சி என்ற, நீண்டகால வெளிநாட்டு நாணய வழங்குநரின் சவாலான நிலையை, ஃபிட்ச் என்ற பொருளாதார தர மதிப்பீடுகள், உறுதிப்படுத்தியுள்ளன.
இதன்படி, இலங்கை நாட்டின் சி.சி.சி மதிப்பீடு, நடுத்தர கால, குறைந்த அந்நிய செலாவணி இருப்பு மற்றும் உயரும் அரசாங்கக் கடன் என்ற வகையில், வெளிநாட்டு கடன்களில் திருப்பிச் செலுத்தும் சுமையை பிரதிபலிக்கிறது.
இருதரப்பு கடன் தள்ளுபடிகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு ஒதுக்கீட்டின் எதிர்பார்ப்பு காரணமாக, அண்மைய மாதங்களில் வெளிப்புற பணப்புழக்க அழுத்தங்கள் ஓரளவு குறைந்துவிட்டன.
எனினும் கூட, இலங்கையின் நடுத்தர கால கடன் சேவை சவால்கள், கடன் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று ஃபிட்ச் தர மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.
தற்போது முதல் 2026ம் ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 29 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி கடன்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது.
இந்தநிலையில் 2022ம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும். 2022ம் ஆண்டின் இறுதிக்குள் இது 3.9 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்து விடும் என்று ஃபிட்ச் கணித்துள்ளது.
நடைமுறைக் கணக்கு பற்றாக்குறை, 2021ம் ஆண்டில் 2.8 சதவீதமாகவும், 2022ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதமாகவும் விரிவடையும்.
சுற்றுலாத்துறை 2022ம் ஆண்டிலிருந்து மட்டுமே மீளக்கூடும் என்றும் ஃபிட்ச் கணிப்புகள் கூறுகின்றன.
இதேவேளை 2021 பொருளாதார வளர்ச்சி முன்னதாக, 4.9 வீதம் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அது 3.8 வீதமாகவே இருக்கும் என்றும் ஃபிட்ச் தர மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.