சுருக்குவலை பாவித்து மீன்பிடி நடவடிக்கை! மட்டு. ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில், கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் ஒரு சில பரிசோதகர்களின் அனுசரனையுடனேயே சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த சட்டவிரோத சுருக்கு வலையை அடியோடு இல்லாமல் ஒழிக்க விசேட அதிரடிப்படையினருக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு - பாலமீன்மடுவில் நேற்று (25.10.2026) மாலை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சட்டவிரோத சுருக்கு வலைகள் கைப்பற்றல்
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முதலாம் திகதி எமது அமைப்பு கடற்தொழிலாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அதனை கடற்படையினருக்கு வழங்கி முதற் கட்டமாக 5 சட்டவிரோத சுருக்கு வலைகளை கடலில் வைத்து கைப்பற்றினோம், அதன் பின்னர் கடந்த 20ம் திகதி இவ்வாறு கிடைத்த தகவல்களை கடற்படையினருக்கு வழங்கி இரண்டாம் கட்டமாக காத்தான்குடி தொடக்கம் மாங்காடு வரைக்கும் உள்ள கடலில் 2 கோடி ரூபா பெறுமதியான 4 சட்டவிரோத சுருக்கு வலைகளை கைப்பற்றினோம்.

அதில் கைப்பற்றப்பட்ட சுருக்கு வலைகள் மிகவும் எடை கூடிய சுருக்கு வலைகள். அதை சிறிய படகில் ஏற்றுவது கடினமானது. இருந்த போதும் ஒரு சிறிய படகில் ஒரு வலையை ஏற்றி அதை கல்லடி கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றோம்.
ஏனைய 3 வலைகளையும் கடற்படை கப்பல் வர வழைத்து அதில் ஏற்றிய நிலையில் கல்லடியில் மற்றும் பாலமீன்மடுவில் துறைமுகம் இல்லாத காரணத்தால் அந்த கப்பலை கரைக்கு கொண்டு வர முடியாத காரணத்தால் அதனை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று இறக்குமாறு கடற்படையினரிடம் கோரினோம்.
அதனடிப்படையில் அவர்கள் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று அங்கு கடற்றொழில் பரிசோதகரிடம் கடற்படையினர் கையளித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
தீவிர புயலாக மாறப்போகும் அர்னாப்! அவசர அறிவுறுத்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri