இலங்கை கடலுக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடிப்படகுகள்
இலங்கை கடலுக்குள் அத்துமீறி நுழைந்த நான்கு இந்திய மீன்பிடிப்படகுகள் திருப்பியனுப்பப்பட்டன .
இந்த தகவலை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார் கடல் பகுதியில் வைத்து சுமார் 40 மீனவர்கள் பயணித்த இந்த நான்கு இந்திய மீன்பிடிப்படகுகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது .
இதனையடுத்து 24 மணி நேர கண்காணிப்புப் பணிகளை அதிகரிப்பதன் மூலம் இலங்கைத் தீவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் வழக்கமாக இந்தியர்கள் இலங்கை கடலில் மீன்பிடியில் ஈடுபடும்போது கைது செய்கின்றமை வழக்கமாகும்.
இருப்பினும், கோவிட் வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலை இலங்கையில் தீவிரம்
அடைந்துள்ள நிலையில், இந்தியர்கள் கைது செய்யப்பட்டு கரைக்கு கொண்டு
வரப்படுவதற்கு பதிலாக திருப்பி விடப்பட்டுள்ளனர்.