போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் பிடிபட்ட மீன்பிடி படகு!பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரம்
தெற்கு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடனான இரண்டு மீன்பிடி படகுகள் டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து T-56 மற்றும் M-16 தாக்குதல் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், மகசின்கள் மற்றும் பிற ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பல இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்களும் இந்தப் படகுகளில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர், போதை ஒழிப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த படகுகளில் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், எந்த வகையைச் சேர்ந்தவை, எத்தனை பொதிகள் உள்ளன என்பது தொடர்பான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த இடத்திற்கு பொலிஸ்மா அதிபரும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam