கடற்றொழிலாளர்களுக்கு வெளியான அறிவிப்பு - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, புத்தளம் முதல் அம்பாந்தோட்டை வரையிலான கடற்றொழில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிக்கு இன்னும் அதிக ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால வானிலை எச்சரிக்கைகள்
புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகளில் நிலவிய பலத்த காற்று தற்போது ஓரளவு தணிந்துள்ளது.

இருப்பினும், அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகள் கரையோர கடற்றொழில் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து உகந்ததாக இல்லாததால், மறு அறிவிப்பு வரும் வரை கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக அப்பகுதிகளிலிருந்து செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்மேற்குப் பருவக்காற்றின் தாக்கத்தால் நாட்டைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் எந்த நேரத்திலும் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அனைத்து கடற்றொழிலாளர்ககளும் உயிர் காப்புச் சட்டைகளை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்கால வானிலை எச்சரிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.