இந்தியா செல்ல உள்ள ஜனாதிபதியிடம் கடற்றொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
இந்தியா செல்ல உள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் பேச வேண்டும் என யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று (25.09.2024) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இந்தியா எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களின் வருகையினால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த அரசாங்கத்தில் கடற்றொழிலாளர் சமூகம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்தியா கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.
சட்ட விரோத கடற்றொழில்
இந்நிலையில், புதிய ஜனாதிபதி அநுரகுமார பதவி ஏற்றுள்ளார். அவர் எமது கடற்றொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பில் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி நிரந்தர தீர்வினை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதோடு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
