இந்திய இழுவைப்படகு அடாவடி: யாழ். சுழிபுரம் கடற்றொழிலாளர்களின் வலைகள் நாசம்

Indian fishermen Jaffna Sri Lanka Fisherman
By Kajinthan Jan 10, 2025 01:13 AM GMT
Report

இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி கடற்றொழிலாளர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த கடற்றொழிலாளர் திருவடிநிலை கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன.

இதனால் அவரிடம் இருந்து 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில், ஆறு வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. 

இது குறித்து பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றிரவு 10 மணியளவில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட ரோலர்கள் எமது வலையை மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்துள்ளன. இப்பொழுது கடற்றொழில் பருவகாலம். இந்திய இழுவை படகுகளின் இவ்வாறான செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் சிறீதரன் மீது வக்கிரத்தை கொட்டித்தீர்த்த சாணக்கியன்

கொழும்பில் சிறீதரன் மீது வக்கிரத்தை கொட்டித்தீர்த்த சாணக்கியன்

தீர்க்கமான முடிவு

“ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்றே இந்த வலை முதல்களை உருவாக்கி கடலில் தொழில் செய்தேன். எனது வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன். வங்கி கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கின்றேன்.

இந்திய இழுவைப்படகு அடாவடி: யாழ். சுழிபுரம் கடற்றொழிலாளர்களின் வலைகள் நாசம் | Fishermen S Nets Destroyed In Jaffna

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கின்றார். அதுபோல இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையையும் தீர்த்து வையுங்கள்.

இந்திய இழுவைப்படகு அடாவடி: யாழ். சுழிபுரம் கடற்றொழிலாளர்களின் வலைகள் நாசம் | Fishermen S Nets Destroyed In Jaffna

புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கம் எனக்கு இழப்பீடினை வழங்கி, நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும்“ என்றார். 

யாழில் அநுரவின் பெயரில் மோசடி! மதபோதகர் உட்பட இருவர் பொது மக்களிடம் சிக்கினர்

யாழில் அநுரவின் பெயரில் மோசடி! மதபோதகர் உட்பட இருவர் பொது மக்களிடம் சிக்கினர்

சுண்ணாம்புக்கல் அகழ்வின் மோசமான பக்கம்: விளக்கமளித்த ஐங்கரநேசன்

சுண்ணாம்புக்கல் அகழ்வின் மோசமான பக்கம்: விளக்கமளித்த ஐங்கரநேசன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US