கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்
யாழ், பருத்தித்துறை(Point Pedro)= கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கடற்றொழிலாளர்கள் யாழ். மாவட்டச் செயலாளர், ஆளுநர் மற்றும் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர்.
பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் தங்குமிடங்களை அகற்றுமாறும் தவறும் பட்சத்தில் இரு வாரங்களின் பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழ்வாதாரம்
இலங்கை முழுவதும், கடற்கரையோரங்களில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலமே கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் கரையோர வாடிகளை மாத்திரம் அகற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது ஏன்?
இதனால் எமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படையும் என கடற்றொழிலாளர்கள் அமைச்சரிடமும் மாவட்ட அரச அதிபரிடமும் முறையிட்டுள்ளனர்.
இதனை உடன் நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் குறித்த திணைக்கள அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் அடுத்து வரும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam