யாழில் பெருமளவான அதிரடிப் படையினர் குவிப்பு! - போராட்டகாரர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை (PHOTO)
பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பெருமளவான அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்திய கடற் தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி கடந்த நான்கு நாட்களாக சுப்பர் மடம் பகுதியில் கடற் தொழிலாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தற்போது நீதிமன்றின் கட்டளையுடன் அந்த பகுதிக்கு வந்த பொலிஸார் தடையுத்தரவு தொடர்பான கட்டளையை வாசித்து வருவதாக எமது செய்தியளர் தெரிவித்தார்.
மேலும் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.














